சிங்கம் படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா நடித்தபோது சூர்யாவை விட அனுஷ்கா உயரமாக இருந்ததால் சூர்யா ஹீல்ஸ் ஷூ அணிந்து நடித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு தொகுப்பாளினிகள் கிண்டலடித்துள்ளனர்.

அனுஷ்காவுக்கே ஹீல்ஸ் போட்டு நடித்த சூர்யா, அமிதாப்புடன் நடிக்கும்போது ஸ்டுல் போட்டுத்தான் நடிக்கணும் என்று கிண்டல் செய்தனர். அல்லது இருவரையும் உட்கார வைத்தே படம் முழுவதும் எடுத்துவிட்டால் இந்த உயர பிரச்சனை வராது என்றும் வச்சு செஞ்சுள்ளனர். இதற்கு சூர்யாவின் ரசிகர்களிடம் இருந்து பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளது.