ஜல்லிக்கட்டு போரட்டம் மூலம் பிரபலமானவர் ஜூலி. பெண் பிள்ளைகள் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று பலரும் பாராட்டினர். ஆனால் அத்தனையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி பங்கு பெறும் வரைதான். அந்த நிகழ்ச்சியில் இவர் நடந்துகொண்ட விதம் இவர் மீதான நல்லெண்ணத்தை உடைத்தது. பலரும் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார் ஜூலி.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலைக்காக இண்டர்வியூவில் பங்கேற்றார். அப்போது தொலைக்காட்சி அலுவலர்களிடம், பணியில் சேர்ந்துகொள்கிறேன் ஆனால் விஜய் தொலைக்காட்சியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தால் உடனடியாக சென்றுவிடுவேன் என்று கூறியுள்ளதாகவும், அதனை அந்த தொலைக்காட்சி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.