தொலைக்காட்சி தொகுப்பாளினி பாவனாவின் டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டனர்.

சின்னத் திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் பாவனா. இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது பல கருத்துகளை தெரிவித்து வந்தார். ஜல்லிக்கட்டின் போது, பீட்டாவின் ஆதரவாளரான நடிகை த்ரிஷாவிற்கு பல்வேறு தரப்பினர் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்த போது, உங்கள் முடிவில் நீங்கள் உறுதியாக இருங்கள் என பாவனா திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், இவரின் டிவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் யாரோ சமீபத்தில் ஹேக் செய்துவிட்டனர். இதுபற்றி கருத்து தெரிவித்த பாவனா, இந்த மோசமான வேலையை செய்தவர்கள் யார் என்பதை விரைவில் கண்டு பிடிப்பேன் எனக் கூறி வருகிறார். இவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.