சென்னை தண்டையார் பேட்டையில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக இந்து அமைப்பை சேர்ந்த இரண்டு பேரை தஞ்சாவூர் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள வைத்தியநாதன் மேம்பாலம் அருகே கடந்த 19-ஆம் தேதி பாரத் முன்னணி என்ற இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பொதுக்கூட்டம் நடத்தினர். இதில் இந்து மக்கள் சேனா தலைவர் சரவணன் மற்றும் ருத்ர சேனா தலைவர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்து அமைப்பினர் நடத்திய இந்த பொதுக்கூட்டத்தில் இவர்கள் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆர்கே நகர் போலீசார் 6 பேர் மீது மதக்கலவரத்தை தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு தஞ்சாவூரில் இருந்த சரவணம் மற்றும் தங்கராஜை போலீசார் திடீரென கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.

தகவலறிந்து வந்த இந்து அமைப்பினர் ஆகே நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்புக்காக கூடுதல் பாலீசார் வரவழைக்கப்பட்டனர்.