Police TikTok video – இரு பெண் போலீசார் கடற்கரையில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டிக்டாக் வீடியோவை பலரும் பயனபடுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்களுக்கு அதிக லைக் கிடைக்க வேண்டும் என சிலர் சாகசத்தில் ஈடுபட்டு சில சமயம் உயிரை இழப்பதும் உண்டு. சமீபத்தில் கூட ஒரு இளைஞர் பின்னால் டைவ் அடிக்க முயற்சி செய்து கீழே விழுந்து மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி வெளியானது.

சில சமயங்களில் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் டிக்டாக் வீடியோவை வெளியிட்டு சர்ச்சைகளை சிக்குவதுண்டு.

இந்நிலையில், சமீபத்தில் கடலூரில் பணிபுரியும் இரு பெண் போலீஸ் அதிகாரிகள் கடற்கரையில் சலக்கு சலக்கு சரிக சேலை சலக்கு சலக்கு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகியது. அப்போது காலில் ஷூ கூட இல்லாமல் அவர்கள் கொளுசு அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video Cutesy – Polimer News