3வது சிறுமியை இரண்டு காம கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்திற்கு பெற்ற தாயே காரணமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருவள்ளூரில் வசிக்கும் தம்பதிக்கு 3 வயது குழந்தை இருக்கிறாள். சமீபத்தில் குழந்தையும், தாயையும் கடந்த சில நாட்களாக காணவில்லை என அப்பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பெண் தனது தாய் வீட்டிற்கு செல்லவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், சில நாட்களுக்கு பின் அப்பெண் குழந்தையுடன் வீட்டிற்கு திரும்பினார். அதன்பின் அந்த சிறுமியின் உடல் பாதிப்படைந்தது. மருத்துவமனையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில், தனது கள்ளக்காதலனை சந்திக்க உறவினர் ஒருவருடன் சென்ற போது அவர்கள் இருவரும் தனது மகளை 10 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்தனர் என பகீர் தகவலை கூறினார். இதையடுத்து, அந்த 2 பேர் மற்றும் சிறுமியின் தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.