வேலூரில் விஸ்வாசம் படம் பார்க்க சென்ற மாமனார்,மருமகனுக்கு கத்துக்குத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‘சிறுத்தை’ சிவா மற்றும் ‘தல’ அஜித் கூட்டணியில் உருவாகி வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்ற ‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தினைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இவர்கள் கைகோர்த்து மாஸாக உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படம் நாடு முழுவதும் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  ஒல்லியான தேகத்தில் யோகி பாபு வைரல் புகைப்படம்

இப்படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு,ரோபோ சங்கர்,விவேக்,கோவை சரளா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில் வேலூரில் இன்று அதிகாலை 1 மணிக்கே ரசிகர்களுக்கான சிறப்பு ஷோ திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது.படம் பார்க்க கூட்டம் அலைமோதியது.அதில் வயதான ஒருவர் நபர் தன் மருமகனுடன் படம் பார்க்க  சென்றிருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  பொங்கலுக்கு 'விஸ்வாசம்' படத்துடன் வெளியாகும் மற்ற படங்கள்!

அப்போது அங்கு வந்த நான்கு மர்ம நபர்கள் இவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிப்போக அந்த மர்ம நபர்கள் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பித்தனர். காயம் அடைந்த இருவரையும் அவசர அவசரமாக அருகிலுள்ள  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த  போலீஸார் தப்பி ஓடிய மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  விஸ்வாசம் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து படம் பார்த்த கும்பல்

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.