நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் திடீரென திரையுலகில் இருந்து காணாமல் போனார். அதன்பின் தற்போது அவர் ஒருசில படங்களில் நடித்து வரும் நிலையில் திடீரென அவர் மீது புகார்கள் குவிந்து வருகிறது

ஏற்கனவே ஷங்கரின் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஷங்கர், வடிவேலு மீது புகார் கூறியிருக்கும் நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஆர்.கே ‘நானும் நீயும் நடுவுல பேயும்’ என்ற படத்திற்காக வடிவேலுக்கு ரூ.75 லட்சம் சம்பளம் கொடுத்ததாகவும், ஆனால் படப்பிடிப்புக்கு அவர் வருவதில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதேபோல் ஜிவி பிரகாஷ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமான வடிவேலு, அந்த படத்தின் தனது காட்சிகளை மாற்றும்படி இம்சை கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.