தமிழ் திரையுலகம் எதற்காக ஸ்டிரைக் செய்கிறது? யாரை எதிர்த்து ஸ்டிரைக் செய்கிறது என்றே பலருக்கு தெரியவில்லை. கியூப் மட்டும்தான் பிரச்சனை என்றால் கியூப் போன்ற வேறு நிறுவனங்களை அணுகலாம். இதற்காக படப்பிடிப்பு கூடாது, ரிலீஸ் கூடாது, என்றால் இதனால் ஏற்படும் நன்மை என்ன என்பதே கேள்வி.

இந்த ஸ்டிரைக்கால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதால் அரசும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பாதிக்கப்படுவது வட்டிக்கு பணம் வாங்கி படம் தயாரித்து ரிலீசுக்கு காத்திருக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் மட்டுமே

இந்த நிலையில் வட்டி தலைக்கு மேல் ஏறுவதால் டிக் டிக் டிக் மற்றும் பாஸ்கர் தி ராஸ்கல் ஆகிய இரண்டு படங்களும் தடையை மீறி விரைவில் ரிலீஸ் செய்ய போகின்றார்களாம்.இதற்கு பெரிய நடிகர் ஒருவர் மறைமுகமாக ஆதரவு கொடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது