கடந்த 2013ல் வந்த விஸ்வரூபம் படம் வெற்றியை தொடுவதற்கு முன் பலத்த சர்ச்சையை சந்தித்தது. பின் பலகட்ட போராட்டத்துக்கு பின் ஒரு வழியாக படம் வந்து வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பின் விஸ்வரூபம் 2 அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு இன்றுவரை தாமதமாகி வருகிறது. கடும் பிரச்சினைகளுக்கு இடையில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவரும் நிலையில் தனக்கு வரவேண்டிய தொகைக்காக அதற்கும் தடை கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதலை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று முக்கிய மொழிகளில் தயாராகியுள்ளது.