திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் சமந்தாவுக்கு இன்று பிறந்தநாள். தனது பிறந்தநாளை தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி யு டர்ன் படப்பிடிப்புவில் கொண்டாடினார்.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். திருமணம் முடிந்த கையோடு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்த கொண்டிருக்கிறார். இந்த மாதிரி திருமணம் முடிந்த உடனே நடிக்கும் வாய்ப்பு எந்த நடிகைக்கும் அவ்வளவு எளிதாக அமைந்து விடாது. ஆனால் சமந்தா பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் உடன் சீமராஜா, விஷாலுடன் இரும்புத்திரை, சூப்பர் டீலக்ஸ், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் சாவித்திரி வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் ஆகியவற்றை வெளியாக தயாராக உள்ளது.

திருமணத்திற்கு பிறகு சமந்தா கொண்டாடும் முதல் பிறந்தநாள். இதற்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்நத பிரபலங்களும், ரசிகா்பெருமக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனா். சமந்தா யு டர்ன் படத்தின் படப்பிடிப்பில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். எப்போதுமே ஷூட்டிங் நடக்கும் இடத்தை ஆழமாக நேசிப்பவரான சமந்தா அந்த இடத்தை பிரிந்து செல்லும் போது எதையோ பறிகொடுத்தது போல இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.

தெலுங்கில் அவர் நடிப்பில் வெளிவந்த ரங்குஸ்தலம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது. படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய சமந்தாவிற்கு அந்த இயக்குநா் பவன்குமார் மற்றும் நடிகா் ஆதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனார்.இதனால் அவருக்கு மிகவும் பிடித்த இடமான படப்பிடிப்பு தளத்திலேயே பிறந்த கொண்டாடியது இரண்டடிப்பு மகிழ்ச்சியாக தான் இருக்கும்.