நல்லா பாருங்கப்பா! அது வேற படமா இருக்கப்போவுது: கருணாகரனின் கலாய்ப்பு

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சூரி நடிப்பில் எழில் இயக்கிய ‘சரவணன் இருக்க பயமேன்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. எழில் இயக்கிய முந்தைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு எந்தமாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்

இந்த நிலையில் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்துள்ளது. உதயநிதியின் முதல் படமான ‘ஒருகல் ஒரு கண்ணாடி’ படம் முதல் ‘மனிதன்’ படம் வரை இதுவரை வரிவிலக்கு ரிலீசுக்கு முன்னர் பெற்றது இல்லை. ஒருசில படங்களுக்கு அவர் நீதிமன்றம் வரை சென்று போராடி தான் வரிவிலக்கை பெற்றார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு எந்தவித போராட்டமும் இல்லாமல் வரிவிலக்கு கிடைத்ததற்கு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி இன்று இல்லாததே காரணம் என்று திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றன

தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்தது குறித்து காமெடி நடிகர் கருணாகரன் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘நல்லா பாருங்கப்பா, அது வேற படத்துக்கான வரிவிலக்கு சான்றிதழா இருக்கும்? என்று காமெடியுடன் பதிவு செய்துள்ளார்.