காவிரி மேலாண்மை அமைக்கும் வரையில் திரையரங்குகளில் படங்கள் வெளியிட கூடாது என்று பல்வேரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் காவிரி மேலாண்மை அமைக்கும் வரை தமிழ் திரைப்படங்களின் வெளியிட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மைக்காகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. தமிழகம் மட்டுமல்லாது எல்லா நாடுகளில் இருக்கும் தமிழர்கள் காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை அமைக்காத வகையில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனா். திரைப்படத்துறையை சோ்ந்த பாரதிராஜா, இயக்குநா் ராம், கருணாஸ் மற்றும் சீமான் உள்ளிட்டவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதனால் ஐபிஎல் போட்டி புனேவிற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இளைஞா்களை பொழுது போக்கில் ஈடுபடுத்தும் மற்றொரு கேளிக்கையான சினிமாக்கள் புதிதாக வெளியிடப்படக் கூடாது என்று சிலா் கருத்து தெரிவித்தனா். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத வகையில் தமிழ் திரைப்படங்களின் வெளியீடம் ஒத்தி வைக்கப்படுமா என்று திமுக செயல் தலைவர் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவா் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்காதது போல தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை அமைக்கும் வரை ஒத்தி வைக்கப்படுமா? அப்போது தான் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமா ஈா்க்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.