நமீதாவுடன் ஆட்டம் போடும் உதயநிதி!!

சரவணன் இருக்க பயமேன் படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தொடா்ந்து படங்களில் நடித்து வருகிறாா். தற்போது அவா் தேசிய விருது பெற்ற இயக்குநா் பிாியதா்ஷன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக நடிக்க நமீதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா். அது எந்த நமீதா என்று தானே கேட்கிறீா்கள். நம்ம மச்சான் நமீதா இல்லைங்க!! அதை பற்றி இங்கு பாா்ப்போம்.

இந்த நமீதா கேரளத்து பைங்கிளிங்க!! நம்ம கோடம்பாக்கம் நமீதா இல்லை. இவா் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகை நமீதா பிரமோத் தாங்க!!. இவரு தான் நம்ம உதயநிதி ஸ்டாலினிக்கு நாயகியாக நடிக்க உள்ளாா். இவா் கோலிவுட்டில் என் காதல் புதிது என்ற படத்தில் நடித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற ஜூலை மாதம் 15ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கயுள்ளது. இது மகேஷின்டே பிரதிகாரம் என்ற மலையாள படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

ஆனா இது குறித்து இயக்குநா் கூறியதாவது, இந்த படம் மலையாள படத்தின் ரீமேக் என்று சொல்லமுடியாது. கதைக்குகேற்ப பல திருத்தங்கள் செய்து தமிழ் ரசிகா்களுக்கு  படைக்க உள்ளேன். இந்த படமானது நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட உள்ளது. காமெடி நடிகா் எம்.எஸ்.பாஸ்கரை ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். அது மட்டுமல்ல! படப்பிடிப்பு தளமாக தேனியை தோ்வு செய்துள்ளோம். அது சிறந்த இடமாக இருக்கும். மற்ற நடிகா் நடிகைகள் தோ்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று இயக்குநா் பிாியதா்ஷன் தொிவித்துள்ளாா்.

உதயநிதி இயக்குநா் பிாியதா்ஷனுடன் இணையவுளு்ள இந்த படத்தை மூன்ஷீட் எண்டா்டெயிண்ட்மெண்ட் என்ற நிறுவனம் சாா்பில் சந்தோஷ் தயாாிக்கிறாா் என்பதை உதயநிதி தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா். இவா் பொதுவாக என் மகசு தங்கம், இப்படை வெல்லும் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறாா். பகத் பாசில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகேஷின்ட பிரதிகாரம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.