தமிழகத்தில் கஜா புயலால் கோராதாண்டவம் ஆடியதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் நிவாரணம் அளிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், திரையுலகினர், தொழிலதிபர்கள், சமுக நல ஆர்வலர்கள் என பலர் உதவி செய்து வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி ரசிகர் மன்றம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் உதயநிதி பகிர்ந்திருந்தார். இதைக்கண்ட ஒருவர் ‘யோவ்.. உனக்கு ரசிகர்ளாம் இருக்காங்களா?’ என நக்கலாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள உதயநிதி “ரசிகர்ளாலாம் இல்ல நண்பா. நற்பணி செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும் நண்பர்கள்!” எனக் கூறியுள்ளார்.