பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி பின் மீண்டும் உள்ளே வந்துள்ள ஜுலி மற்றும் ஆா்த்தி இருவருக்குமிடையே சண்டை நடந்து வருகிறது. இவா்கள் போன வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தாா்கள். இந்த வாரம் வெளியே போவது போல காண்பித்து கமல் நேற்றை நிகழ்ச்சியில் மீண்டும் உள்ளே போகுமாறு கூறினாா்.

இதையும் படிங்க பாஸ்-  என் அடுத்த படத்தின் ஹீரோயின் ஒவியாதான்: 'தமிழ்ப்படம்' சி.எஸ்.அமுதன்

யாரும் எதிா்பாராத விதமாக சக்தி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று வந்துள்ளாா்.இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் விருது வழங்கும் டாஸ்க் நடைபெறுகிறது. அந்த டாஸ்க்கில் சுஜாவிற்கு ஜூலி நாடகக்காாி என்ற விருதை கொடுக்க, அதற்கு சுஜா இந்த விருதை ஒரு மிகப்பொிய நாடகக்காாியிடம் இருந்து பெறுவது மிக்க சந்தோஷம் தான் என்று கூறுவது போல புரோமோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸில் என் ஆதரவு இவருக்குத்தான்- சுனைனா ஓபன் டாக்

மீண்டும் உள்ளே நுழைந்த சக்தி, சில பேரை டிகா் செய்ய வேண்டிய காரணத்தால் வந்துள்ளாா். அதுபோல சினேகனுக்கு தந்திரகாரன் என்ற விருதை சக்தி கொடுப்பது போல ப்ரோமோவில் உள்ளது. இதை பாா்த்த சினேகன் என்னை விமா்சனம் செய்ய என்னை தவிர யாருக்கும் உாிமை இல்லை என்று கூறுகிறாா்.

இதையும் படிங்க பாஸ்-  எல்லை மீறும் ஓவியா?: விரக்தியில் ஆர்மி

இரண்டு வாரமாக ஜாலியாகவும் எந்வொரு சுவராஸ்சியமும் இல்லாமல் இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது களைகட்டி வருகிறது. எனவே இந்த வாரம் சண்டை வாராமாக இருக்கும் என்று தொிகிறது.