விஸ்வாசம் திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என அப்படத்தை பார்த்த ஐக்கிய அரபு சென்சார் போர்டு உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார்.

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் விஸ்வாசம் படம் வருகிற 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ மிகுந்த வரவேற்பை பெற்று யுடியூப்பில் ஹிட் அடித்து வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, தம்பி ராமய்யா, யோகி பாபு, கோவை சரளா, விவேக், ஜகதி பாபு உள்ளிட்ட நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தை ஐக்கிய அரசு நாட்டின் சென்சார் போர்டில் உறுப்பினராக உள்ள உமர் சந்து பார்த்துள்ளார். இதையடுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தை பாராட்டி டிவிட் செய்துள்ளார்.

விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டேன். என்ன ஒரு மாஸ் பொழுதுபோக்கு படம். அதிலும், முதல் பாதி முழுவதும் சிறந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் இருக்கிறது. தல அஜித் கலக்கியிருக்கிறார். ரசிகர்களின் இதயத்தை திருடுகிறார்” என பதிவிட்டுள்ளார்.

இது அஜித் ரசிகரக்ளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.