இந்தி தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் குஜராத்தை சேர்ந்த நடிகை ஷ்ரெனு பாரிக். இவர் தனக்கு 6 வயதில் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

பாலியல் தொல்லை குறித்து சமூக வலைதளத்தில் ஷ்ரெனு பாரிக் கூறியதாவது, சின்ன வயதில் பள்ளி விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீட்டுக்கு சென்ற போது பேருந்தில் பயணம் செய்தேன். அப்போது சீட் இல்லாததால் தாத்தா ஒரு அங்கிளின் மடியில் என்ன உட்கார வைத்தார். அப்போது எனக்கு 6 வயது தான் இருக்கும்.

அங்கிள் தான் என்பதால் நானும் அவர் மடியில் தூங்கிவிட்டேன். அப்போது ஏதோ தவறாக நடக்கிறது என பதறியபடி தூக்கத்தில் இருந்து எழுந்தேன். அப்போது அந்த அங்கிள் எனது அந்த இடத்தில் கையை வைத்து என்னை பிடித்துக் கொண்டு இருந்தார். எனது உடல் நடுங்கியது. அப்பொழுது எனக்கு 6 வயது என்பதால் என் தாத்தாவிடம் அந்த அங்கிள் செய்த விஷயத்தை சொல்ல முடியவில்லை.

ஆனால் நான் அந்த நபருக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்க வேண்டும். என் தோழிகளும் இது போன்ற தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். வெளியே சொன்னால் சமுதாயம் நம்மை நம்பாதோ என்ற பயத்திலேயே சொல்லவில்லை. ஆனால் இனிமேல் பாலியல் தொல்லைகளை சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. துணிந்து பேச வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் அவர்.