உத்தரப்பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற நகரமான பிரயாக்ராஜ்ஜில் (அலகாபாத்) கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி கும்பமேளா தொடங்கியது.

கங்கை நதிக்கரையில் 8 வாரங்கள் நடைபெறும் இந்த இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 15 கோடி பேர் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளனர்.

மௌனியா அம்மாவசையான நேற்று முன்தினம் கூட்ட நெரிசலில் சிக்கி 50 ஆயிரம் பேர் வரை காணாமல் போய்விட்டனர்.  காணாமல் போனோர் குறித்த அறிவிப்பு பகுதியில் ஏராளமானோர் கதறி அழுதபடி இருந்தனர்.

 காணாமல் போனவர்களிடம் செல்போன் வசதி இருப்பதால்  அவர்களை குடும்பத்தினருடன் சேர்க்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.