உத்தரபிரதேச பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமித் எனும் கணவர் தன் மனைவிக்கு புடவை வாங்கித் தராததால் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமித் என்பவருக்கும் அஞ்சனா என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமித் வீட்டில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட அஞ்சனா தனக்கு புதிய புடவை வாங்கித் தர அமித்திடம் கேட்டுள்ளார். ஆனால் அமித் இதற்கு மறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனை அடுத்து அமித் வெளியே சென்றிருந்தபோது அஞ்சனா தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அஞ்சனாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அஞ்சனாவின் பெற்றோரோ தன் மகளை வரதட்சணை கொடுமையால் கொலை செய்துவிட்டனர் எனப் புகார் அளித்துள்ளனர்.