தமிழ் சினிமாவில் கால சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிகொள்ளும் இயக்குனர்கள் வெகு குறைவு

இப்போது அல்ட்ரா மாடர்னாக டெக்னாலஜி முன்னேற்றத்தில் படம் எடுக்கும் ஷங்கர்,முருகதாஸ், ராஜமவுலி போன்ற பிரமாண்ட இயக்குனர்கள் கூட இன்னும் முப்பது நாற்பது வருடம் கழித்து பீல்டில் இருந்தார்கள் என்றால்.

அப்போதிருக்கும் இதை விட மாடர்ன் தலைமுறைக்கு படம் எடுத்து அதை அப்போது இருக்கும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது புதிர்தான்.

ஏனென்றால் ஒரு காலத்தில் ஜெமினி கணேசன் காதல் மன்னன் என்ற பெயரோடு அப்போதிருந்த மாடர்ன் மங்கைகளால் ரசிக்கப்பட்டவர்.

பின் எண்பதுகளில் மோகன் வந்தார் அவருக்கும் பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.

90களின் இறுதியில் காதல் தேசம் வந்த போது அப்பாசுக்கு ஒரு பெரிய மதிப்பும்,2000ங்களின் ஆரம்பத்தில் மின்னலே,அலைபாயுதே

வந்தபோது மாதவனும் சாக்லேட் பாயாக கொண்டாடப்பட்டனர்.

இப்போதைய தலைமுறை பெண்களை இவர்களை கொண்டாட சொன்னால் கொண்டாடுவார்களா?

காலத்திற்கேற்றவாறு சினிமா கலைஞர்களைஅந்தந்த காலகட்ட தலைமுறை ரசிக்கிறது.

அப்படிப்பட்ட தலைமுறைகளில் எல்லா தரப்பு தலைமுறை ரசிகர்களையும் திருப்தி படுத்தியவர்கள் இருக்கிறார்களா என்றால் இருக்கிறார்கள்,

ஆனால் அதிகம் இல்லை என்பதே உண்மை. அவர்களில் ஒரு சிலரை பற்றி மட்டும் பார்ப்போம்.

கமலஹாசனை எடுத்துக்கொள்ளலாம் அப்போதைய 70களில் 16 வயதினிலேயில் கோவணம் கட்டி நடித்து எண்பதுகளில் ராஜபார்வையில்

கண் தெரியாமல் நடித்து 90களில் குள்ள அப்புவாக நடித்து 2000ங்களில் பத்து அவதாரங்களில் நடித்து என அந்தந்த காலகட்ட ரசிகர்களுக்கெற்ப தன்னை ரெப்ரெஷ் செய்து கொள்வது இவர் பாணி இன்னும் நூறு வருடம் கழித்து நடித்தாலும் அப்போதைய சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்வார்.

இவர்.எம்.எஸ்வியோடும் இளையராஜாவோடும் அதற்கு பின் ரஹ்மானோடும் இப்போது இருக்கும் ஜிப்ரான் வரை அந்தந்த கால கட்ட ரசிகர்களுக்காக அந்தந்த இசையமைப்பாளர்களோடு இணைந்து சரியாக பணியாற்றுவார்.

இயக்குனர் மறைந்த கே.பாலச்சந்தர் அவர்களையும் இது போல் கூறலாம் 60களில் புன்னகை ,பாமா விஜயம்,எதிர் நீச்சல் என எடுத்து

அந்நாளைய ப்ளாக் அண்ட் ஒயிட் ரசிகர்களை திருப்தி படுத்தி

எண்பதுகளில் சிந்து பைரவி,உன்னால் முடியும் தம்பி, புது புது அர்த்தங்கள், என கோல்டன் பீரியட்ஸ் என வர்ணிக்கப்பட்ட எண்பதுகளின் இளையராஜா ரசிகர்களையும் தன் வசமாக்கி,

மாடர்ன் டெக்னாலஜி வளர்ந்த பிறகும் ரஹ்மான் உள்ளிட்டஅப்போதைய கலைஞர்களுடன் பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படம் வரை பணியாற்றி தன் கடைசி கால கட்டம் வரை அப்டேட்டாக இருந்தவர் இவர்.

இன்னொருவர் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் எண்பதுகளில் மோகனுடன் சேர்ந்து பணியாற்றி அப்போது இருக்கும் தலைமுறைக்கேற்றவாறு மெளனராகம்,நாயகன் எல்லாம் எடுத்து இன்னைக்கு செக்க சிவந்த வானம் வரை இன்னைக்கு இருக்கும் மாடர்ன் தலைமுறை ரசிகர்கள் வரை மணிரத்னம் படம் எப்போ வரும் என எதிர்பார்க்க வைத்திருக்கும் அப்டேட் வெர்சன் இவர்.

இதையும் படிங்க பாஸ்-  கமல் ரசிகர் படத்தில் சிம்பு

அந்தந்த காலகட்டத்தில் தன்னை மாற்றிக்கொள்வார்.

90களில் ஆரம்பத்தில் புரியாத புதிரில் சினிமாவில் இயக்குனரான கே.எஸ் ரவிக்குமார் அவர்களும் அப்படித்தான் செளந்தர்யன்,சிற்பி,இளையராஜா,

ரஹ்மான்,ஹாரிஸ் ஜெயராஜ்,எஸ்.ஏ ராஜ்குமார் என அன்றைக்கு இருந்து இன்று வரை உள்ள அனைத்து கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுபவர் இவர்.

இது போல விசயங்களை வைத்து ஒருவரின் அப்டேட்டை புரிந்து கொள்ளலாம்.

இதுபோல எல்லா கால தரப்பு கலைஞர்களுடன் பணிபுரிவது சிரமம் அந்தந்த காலகட்ட கலைஞர்கள் ரசிகர்கள் புரிதல் இருந்தால்தான் சரியாக வரும்.

இன்னும் ஒரு முக்கியமான நபர் இருக்கிறார் அவர்தான் இயக்குனர் ஸ்ரீதர். அந்த காலத்தில் 60களில் கல்யாண பரிசு போன்ற ப்ளாக் ஒயிட் காலத்து படங்களை எடுத்து அந்நாளைய ரசிகர்களையும் கவர்ந்து ,

இளமை ஊஞ்சலாடுகிறது, என 70களில் பெல்பாட்டம் ரசிகர்களையும் கவர்ந்து

தென்றலே என்னைத்தொடு என எண்பதுகளின் இறுதி பகுதி வரையும் 90களில் விக்ரமிற்காக தந்துவிட்ட்டேன் என்னை என கடைசி மூச்சு வரை தன்னையே தந்தவர்.

தான் நோய்வாய்ப்பட்டிருந்த கடைசி காலக்கட்டத்தில் கூட ஒரு பத்திரிக்கை பேட்டியில் ரஜினிக்கு இப்போ இருக்கும் தலைமுறை ரசிக்க கூடிய அளவு தன்னிடம் கதை இருப்பதாக கூறியவர் அந்த அளவுக்கு சினிமா அப்டேட் உள்ளவர்

எந்த கால ரசிகர்களுக்கு நாம் எப்படி படம் எடுக்க வேண்டும் என நுண்ணிய திறனுடன் ஆராயக்கூடிய அப்டேட் இயக்குனர் இவர்.

இன்னும் யாராவது விட்டு போய் இருக்கலாம் .மேற்சொன்ன சில கலைஞர்களை தவிர பல திறமையுள்ள கலைஞர்கள் ஒரு காலக்கட்டத்தில் மிகப்பெரும் திரைப்படம் எடுத்திருக்கலாம் கொடுத்திருக்கலாம்.

ஒரு கட்டத்தில் அவர்கள் இருந்த இடம் தெரியாமலும் தலைமுறை இடைவெளி காரணமாகவும் இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து விடுகிறார்கள்.

ஆனால் இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் கலைஞர்கள் கடைசி வரை இன்று வரை தன்னை அப்டேட்டாக தன் ரசிகர்கள் விட்டுப்போகாமல் வைத்திருந்தவர்கள் இன்னும் வைத்திருப்பவர்கள்.