Uriyadi2 Trending : உறியடி 2 படம் தொடர்பான புரோமோ வீடியோக்கள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

2016ம் ஆண்டு வெளியான உறியடி திரைப்படம் ரசிகர்களிடையேயும், சினிமா விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை விஜய்குமார் என்பவர் நடித்து இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  ஒரே படத்தில் சூர்யா, ஷாருக்கான், மாதவன் – குஷியில் ரசிகர்கள்!

தற்போது விஜய்குமார் அப்படத்தின் அடுத்த பாகமாக உறியடி 2 படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்டின் டீசர் வீடியோவை நடிகர் சூர்யா கடந்த 22ம் தேதி வெளியிட்டார். அந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நடக்கும் அக்கிரமம், அநியாயம் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஒரு இளைஞன் பொங்கி எழுவதை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது டீசரை பார்த்தாலே தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவையும் நடிகர் சூர்யா இன்று வெளியிட்டார். அதேபோல், இப்படத்தை அவரது 2டி தயாரிப்பு நிறுவனமே வெளியிடுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  அஜித் இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா?

இதைத் தொடர்ந்து #Uriyadi2in6days என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 5ம் தேதி வெளியாகவுள்ளது.