படப்பிடிப்பில் ஆபத்தில் சிக்கிய உரு படக்குழு…

நடிகர் கலையரசன் மற்றும் நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உரு’.

இதில் கலையரசன் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார். காலத்திற்கு ஏற்றார் போல் எழுத வேண்டும் என்கிற முனைப்பில் அவர் கொடைக்கானலுக்கு செல்கிறார். அங்கு ஏற்படும் திகில் சம்பவங்களே கதையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.வி என்பவர் தயாரித்துள்ளார். ஜோகன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் விக்கி ஆனந்த், இப்படத்திற்கான் படப்பிடிப்பு அனுபவம் பற்றி கூறும் போது “இந்த படத்தின் படிப்பிடிப்பிற்காக டிசம்பவர் மாதம் 25 நாட்கள் கொடைக்கானல் காட்டுப்பகுதியில் தங்கியிருந்தோம். அப்போது அங்கு கடுமையான குளிர் இருந்தது. சுமார் 4 டிகிரி குளிரில் படப்பிடிப்பு நடத்தினோம். அதனால், கலையரசன், தன்ஷிகா ஆகியோர் மிகவும் சிரமப்பட்டனர்.

இரவில் காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாயிற்று. ஒரு நாள் திடீரென காட்டெருமை கூட்டம் எங்களை சூழ்ந்து விட்டது. முதலிலேயே கவனித்ததால் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பினோம்.

பேய் இல்லாத ஒரு வித்தியாசமான திகில் கதையாக உரு படம் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்” என அவர் கூறினார்.