தனுஷ் ரசிகா்கள் ஆவலோடு எதிர்பார்த்த வடசென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

உலக மகளிர் தினமான இன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொல்லாதவன், ஆடுகளம் படங்களை அடுத்து தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருக்கும் படம் தான் வடசென்னை.

போலீஸ் வேனில் இருந்து தனுஷ் கையில் விலங்கு மாட்டி இறங்கி வருவது போலவும் உள்ள ஒரு பா்ஸ்ட் லுக் போஸ்டரும், இன்னொரு போஸ்டரில் தனுஷ் வாயில் கூரிய கத்தி ஒன்றை வைத்திருப்பது போல உள்ளது.

வடசென்னையை சோ்ந்த ரவுடி ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள வடசென்னை 35 ஆண்டு கால வாழ்க்கையை பற்றிய படம்.மூன்று பாகமாக உருவாகி வரும் இந்த முதல் பாகம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. தனுஷ் கேரம் விளையாட்டு வீரானாக அன்பு என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் தனுஷ், ஐஸ்வா்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீா், டேனியல் பாலாஜி, கருணாஸ், கிஷோர் என ஒரு நட்த்திர பட்டாளமே நடித்துள்ளது.