பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை திரைப்படம் விரைவில் வரவிருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் வந்து வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் ரவுடியிசம் இப்படத்தில் அதிகமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்தரங்கில்  வட சென்னைங்கிற பேரை வைத்துவிட்டு ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்கலாமா? என்ற மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன் இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க பாஸ்-  சென்சாரின் கழுகு பார்வையில் வட சென்னை

கண்டிப்பாக தவறுதான் வட சென்னை’ பகுதியில் கேங்ஸ்டர் மட்டுமே கிடையாது. தவிர, இந்தப் படமும் கேங்ஸ்டர்ஸ் பற்றிய கதை கிடையாது. குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கை, பிரச்னைகளைப் பற்றிதான் படமா எடுத்திருக்கேன். ரெளடிகள் மட்டுமே ‘வடசென்னை’யில் இல்லைங்கிற கருத்தையும் பதிவு செய்ய முயற்சி பண்ணியிருக்கேன் என்று கூறினார்.