கடந்த 28ம் தேதி தனுஷ் பிறந்த தினத்தன்று வட சென்னை டீசர் வெளியானது வித்தியாசமான காட்சிகளும், லிப் கிஸ் காட்சிகளும் அடங்கிய இந்த டீசரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரசித்தனர். அதே நேரத்தில் இரண்டாவது முறையாக வெளியான கமலஹாசனின் விஸ்வரூபம் 2 டிரெய்லரை 15 லட்சத்துக்கும் குறைவானவர்களே பார்த்துள்ளனர்.

இதற்கு வட சென்னை டீசர் ஒரு வகையில் காரணமாக இருந்தாலும் வட சென்னை டீசர் மட்டுமே முழுமையாக காரணமாகவும் இருந்து விட முடியாது.

பல வருடமாக விஸ்வரூபம் 2 வராமல் அது இழுபறியாய் இருப்பதும்  டீசர், டிரெய்லரை மட்டுமே தொடர்ந்து வெளியிட்டு வருவதாலும் கமல் ரசிகர்கள் சோர்வடைந்துள்ளனர் என தெரிகிறது.