Home சற்றுமுன் வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வந்த வட சென்னை படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்க உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்பட்டது. அதன் பின் அவர் அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும், விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதன்பின் அவரும் அப்படத்திலிருந்து விலகினார்.

அந்நிலையில், நடிகர் தனுஷ் பவர்பாண்டி படத்தை இயக்க சென்று விட்டார். மேலும், வேலை இல்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகத்திலும் அவர் நடித்துக் கொண்டிருந்தார். எனவே, வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது பவர்பாண்டி படம் முடிந்து விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல், வேலை இல்லா பட்டதாரி 2ம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், வட சென்னை படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்குகிறது.

இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தனுஷ் “பவர்பாண்டி இன்னும் 2 நாட்களில் வெளியாக உள்ள நிலையில், வட சென்னை படத்தின் படப்பிடிப்பு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. ஒளிரும் சூரியன், கடல், சிறந்த மக்கள், வெற்றிமாறனின் வித்தியாசமான படப்பிடிப்பு தளம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.