தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் என்பதால் இந்த கூட்டணியின் அடுத்த படமான வடசென்னை படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளார். அதிலும் ஜூன் மாதம் ரம்ஜான் திருநாள் வருவதை அடுத்து அந்த நாளில் வெளியிட தனுஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்திருக்கும் இந்த படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.