தனுஷ் வெற்றி மாறன் கூட்டணி என்றாலே அது வெற்றி கூட்டணிதான். ஆடுகளம், பொல்லாதவன் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.இப்படத்தில் சமுத்திரக்கனி,இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, ராதாரவி, கிஷோர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து டுவிட்டரில் ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.

நடிகை ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் படம் மரண மாஸ் என்று பதிவிட்டுள்ளார். அதெ போன்று இன்னொரு ரசிகர் படம் வேர லெவல் என்றும், வாழ்த்துக்கள் வெற்றிமாறன் சார் என்றும் பதிவிட்டுள்ளார். ஆக இந்த படத்தின் விமர்சனங்கள் அனைத்தும் படத்தினை பாராட்டியே வருவதால் வடசென்னை வெற்றிபடம்தான் என்பதில் சந்தேகமில்லை.

Loading...