வடிவேலு ஹீரோவாக நடித்த படங்களில் இம்சை அரசன் மட்டுமே வெற்றி படம். இதனைத் தொடர்ந்து நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன்,எலி,தெனாலிராமன் ஆகிய படங்கள் அட்டர் பிளாப். அரசியல் ஆசை, விஜயகாந்துடன் பகை போன்ற பிரச்சனைகளால் திரையுலகைவிட்டு விலகியிருந்த வடிவேலு தற்போதுதான் பிஸியாகி வருகிறார்.

இந்த நிலையில் ஷங்கர் லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து 23ம் புலிகேசி இரண்டாம் பாகம் தயாரிக்க உள்ளார். இதற்காக ஈ.வி.பி. ஸ்டூடியோவில் அரண்மனை செட் போடப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை 23ம் புலிகேசி கதையிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னாள் நடக்கும் கதையாம். அதாவது 23ம் புலிகேசியின் தாத்தா கதைதான் அதுவாம்.