வைகைப்புயல் வடிவேலு சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இவரது காமெடிக்கு என்றே தனி கூட்டம் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். காமெடி லேஜண்டான கவுண்டமணி செந்தில் இவா்களுக்கு பிறகு அந்த இடத்தை பிடித்த வைகைப்புயல் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து அதனால் சினிமாவிலிருந்து காணாமல் போனார். தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவா் திரும்பி வந்தபோதும் சொல்லும்படியாக படம் ஏதும் அமையவில்லை.

வடிவேலுவிடம் அட்வான்ஸ் தொகையை கொடுத்து புக் பண்ண போனால், கால்ஷுட்டும் கிடைப்பதில்லை.கொடுத்த அட்வான்சும் திருப்பி கிடைப்பதில்லை. அந்த வகையில் தயாரிப்பாளா்களை படாத பாடு படுத்தி எடுக்கிறார் வடிவேலு. இம்சை அரசன் 23ம் புலிகேசி எடுத்த ஷங்கர் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இம்சை அரசன் 23ம் புலிகேசி 2ல் வடிவேலுவிடம் பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார் ஷங்கா். ஆனால் அவரை ஆட்டி படைத்துவிட்டார் வைகைப்புயல். பல பெரிய பெரிய பணமுதலைகளான தயாரிப்பாளா்களை எல்லாம் கதிகலங்க செய்த இயக்குநா் ஷங்கரை ஒரு வழி ஆக்கி விட்டார் வைகைப்புயல். இதனால் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் நின்று விட்டது.

இந்நிலையில் பெரிய தொகையை கொடுத்த ஷங்கருக்கே இந்த நிலைமை என்றால் சில லட்சங்களை கொடுத்து தயாரிப்பாளா் நிலை என்னவாகும். அப்படிதான் சந்தானத்தை வைத்து இயக்கிய ராம்பாலா இயக்கத்தல் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் வடிவேலு. சில லட்சங்களை அட்வான்ஸ் தொகையாக கொடுத்துள்ளார்கள். படத்தின் கதையில் தலையிட்டு இதை இப்படி வைச்சுக்கலாம். அதை இப்படி வைச்சுக்கலாம் என்று ஒரே டார்ச்சா் பண்ண, பொறுத்து பார்த்த டைரக்டா் வடிவேலுவை படத்திலிருந்து நீக்கி விட்டாராம். வடிவேலு அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்கவில்லை. கேட்டு பார்த்தும் அட்வான்ஸ் தொகை கொடுக்கவில்லை வடிவேலு. ஒரு கட்டத்தில் அட்வான்ஸ் தொகையை கொடுக்காவிட்டால் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பதாக மிரட்டி பார்த்தும் கொஞ்சம் கூட பிடிக்க கொடுக்காமல் இருக்கிறார் வடிவேலு.