இந்தியன் 2வில் ஷங்கருடன் இணையும் வடிவேலு

vadivelu

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சூப்பர் ஹிட் ஆன படம் இம்சை அரசன் 24ம் புலிகேசி.வடிவேலு ஹீரோவாக நடித்து ஹிட் ஆன ஒரே படம் இது மட்டுமே. அந்த அளவிற்கு வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தயாரானார், இதற்காக பிரமாண்ட அரண்மனை செட்டுகள் போடப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால் என்ன காரணத்தினாலோ த்ரியவில்லை வடிவேலு இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று போர்க்கொடி தூக்கினார். பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கம் சென்றது, வடிவேலு மீது ரெட் கார்டு விழும் சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து நடந்து வந்த பேச்சுவார்த்தையில் தற்போது ஒரு சுமூகமான சுழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தன்னால் ஷங்கருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கும் இந்தியன் 2வில் தான் நடித்துக் கொடுப்பதாக வடிவேலு கூறியுள்ளாராம். இவர்கள் சமாதானம் ஆன நிலையில் விரைவில் இம்சை அரசன் படப்பிடிப்பும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.