அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் ராஜஸ்தான் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிந்த நிலையில் இன்று முதல் ஈவிபி தீம் பார்க்கில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் வடிவேலு நடிக்கும் காமெடி காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. ‘காவலன்’ படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் இணையும் வடிவேலுவின் காமெடி இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் காஜல் அகர்வாலும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காஜல் அகர்வால் இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்தகட்ட ஐரோப்பிய நாடுகளின் படப்பிடிப்பின்போது சமந்தா இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் நாயகன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகிறது என்பது அனைவரும் அறிந்ததே.