வில்லனாக மாறிய வடிவேலு

01:58 மணி

காமெடியில் கலக்கி வந்த வடிவேலுவுக்கு இம்சை அரசன் கதா நாயகன் அந்தஸ்தை கொடுத்தது. ஆனால் அதற்கு பின்பு நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் தோல்வியை தழுவியது. இந்த சூழ் நிலையில் அரசியல் ஆசை வடிவேலுக்கு வர திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதற்கு பின்பு நடந்த கதை எல்லாம் நாம் அறிந்ததுதான். அனாலும் கதா நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்த அவருக்கு எலி,தெனாலி ராமன் ஆகிய படங்கள் மண்ணை வாரி போட்டது.

தற்போது தனது முடிவை மாற்றிய வடிவேலு காமெடி வேடங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில் ஆர்.கே நடிக்கும்  நீயும் நானும் நடுவுல பேயும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வழக்கான காமெடி வேடம் இல்லை இவருக்கு. வில்லத்தனம் செய்யும் காமெடியனாக நடித்து வருகிறார். தனது கெட்டப்பையும் இப்படத்திற்காக மாற்றியுள்ளார்.

ஏற்கெனவே இவர்கள் இருவரும் நடித்த எல்லாம் அவன் செயல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812