‘புலிகேசி-2’க்காக இளமையாக மாறும் வடிவேலு

வடிவேலு நடிப்பில் சிம்புதேவன் இயக்கி வெளிவந்த ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ வடிவேலுவின் சினிமா பயணத்தில் முக்கியமான படம். சரித்திர பின்னணியில் உருவாகி வெளிவந்த இப்படத்தில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் சிம்புதேவன் களமிறங்கியுள்ளார். இதற்கான ஆயத்த பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முந்தைய பாகத்தில் நடித்த வடிவேலுவே இப்படத்திலும் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் நடித்து முடித்துள்ள வடிவேலு, தற்போது இந்த படத்தில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், முந்தைய பாகத்தை இந்த பாகத்தில் வடிவேலுவை ரொம்பவும் இளமையாக காட்டவிருக்கிறார்களாம்.

இதற்காக வடிவேலு தன்னுடைய எடையை குறைக்கவேண்டும் என்று இயக்குனர் கூறியிருக்கிறாராம். வடிவேலுவும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு மெருகேற்றுவதற்காக தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். இதற்காக கடும் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்து தனது உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வருகிறாராம்.