இயக்குனர் வெங்கட் பிரபுவின் படங்கள் உட்பட பல்வெறு தமிழ் சினிமாக்களில் நடித்து வரும் ஹீரோ வைபவ்.

ஹலோ நான் பேய் பேசுறேன், சரோஜா, கோவா போன்றவை இவரின் முக்கிய படங்கள்.

இவர் சென்னையில் இருந்து வந்தாலும் மெட்ரோ ட்ரெயினில் இதுவரை சென்றதில்லையாம். மெட்ரோ ட்ரெய்ன் வந்து 3 வருடங்களுக்கும் மேலாகியும் இதுவரை மெட்ரோவில் செல்லாத ஏக்கத்தை நேற்று சென்று தீர்த்து கொண்டிருக்கிறார் வைபவ்.

வைபவ்வை ட்ரெய்னில் பார்த்த ரசிக, ரசிகைகள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.