வளர்ந்து வரும் தமிழ் நடிகரான வைபவ், இலங்கைக்கு நடிகைகள் வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பாஜ்வா ஆகியோர்களிடன் சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர்கள் காட்டேரி என்ற படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டிகே இயக்கி வரும் அடுத்த படம் ‘காட்டேரி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட இலங்கையில் நடைபெறவுள்ளதை அடுத்து படக்குழுவினர் அனைவரும் ஏற்கனவே இலங்கைக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பாஜ்வா ஆகிய மூன்று நடிகைகளை நடிகர் வைபவ் நேற்று ஒரே விமானத்தில் இலங்கை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் ஒருசில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சென்னை திரும்பும் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு குலுமணாலி செல்கின்றனர்.

எஸ்.என்.பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் விக்கி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள காமெடி கலந்த திகில், த்ரில்லர் படமாக இந்த படம் உருவாக இருக்கிறது