சமீப நாட்களாக சினிமாவில் சில நடிகர், தயாரிப்பாளர்,இயக்குனர்,பாடலாசிரியர் ஆகியோர் சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துக்களை தெரிவித்து மாட்டிக்கொள்வது வழக்கமாகி வருகிறது.

கமல்,அமீர், வைரமுத்து, மன்சூர் அலிகான், கரு.பழனியப்பன், பாரதிராஜா,ரஜினி என்று இந்த லிஸ்ட் மிகப்பெரியதாக உள்ளது.

தூத்துக்குடி கலவரம், சேலம் எட்டுவழிச்சாலை என பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு சினிமா கலைஞர்கள் ஏதாவது அறிக்கை விடுவது வாடிக்கையாகி விட்டது.

ஏற்கனவே ஆண்டாள் பிரச்சினையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரச்சினையில் சிக்கிய பாடலாசிரியர் வைரமுத்து மீண்டும் ஒரு கருத்தை கூறியுள்ளார்.

அதில் திட்டங்கள்எமக்கு தேவைதான் முட்டை உடைந்தால்தான் குஞ்சு வெளியில் வரும் ஆனால் அது உள்ளிருந்து குஞ்சு உடைப்பதாக வேண்டும் என கூறியுள்ளார்.