நேற்று ராணுவ தளவாட கண்காட்சியை திறந்து வைப்பதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினர். இதேபோல் பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட ஒருசில திரையுலக பிரபலங்களும் அவருக்கு கருப்புக்கொடி காட்டினர்.  இந்த கருப்புக்கொடி போராட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியதாவது:
கருப்பு என்பது சர்வதேச மொழி. இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும். காவிரி மேலாண்மை வாரியத்தைக் கட்டி எழுப்புங்கள். அது கர்நாடகத்துக்கு அநீதி அல்ல; தமிழ்நாட்டுக்கு நீதி” என அவர் பதிவிட்டுள்ளார்.