ஒரு காலத்தில் வெற்றிக்கூட்டணியாக திகழ்ந்தது இந்த கூட்டணி முதல்மரியாதை,நிழல்கள் என பாடலாசிரியர்,இசையமைப்பாளர்,இயக்குனர் என இம்மூவரும் இணைந்த படங்கள் ,பாடல்கள் ரீதியாக மிகப்பெரும் வெற்றியை தொட்டது.

இசைஞானியும் வைரமுத்துவும் பல சம்பவங்களால் பிரிந்து சென்றுவிட்டனர் பல வருடங்களாக இவர்கள் இணையவேயில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் தான் வைரமுத்துவுடன் இணைந்தார்.

மிகப்பெரிய இந்த வெற்றி கூட்டணியை பல வருடமாக மீண்டும் இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பாரதிராஜாவும் ஒரு கட்டத்திற்கு பின் தனது படங்களுக்கு ஹம்சலேகா, தேவேந்திரன், ஏ.ஆர் ரஹ்மான் என திசைமாறி சென்றுவிட்டார்.

நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார் கேள்வியை அவர் ஆரம்பிக்கும் முன்பே நிறுத்துங்க நீங்க என்ன கேட்க போறிங்கன்னு தெரியும் என அவர் கேள்வி கேட்கும் முன்பே பதிலை கூறினார்.

அந்த கூட்டணி இணையாது சார் என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் பதில் கூறினார் அதுலாம் முடிஞ்சு போனது சார் யாரும் அந்த கூட்டணியை எதிர்பார்க்கவில்லை இப்போ இருக்கிற மியூசிக் ட்ரெண்ட் வேற இளைஞர்கள் வேற 40,45 வயசுக்கு மேல உள்ளவங்க வேணா அதை எதிர்பார்க்கலாம்.இளைஞர்களை வைச்சுதான் இன்னைக்கு சினிமா இருக்கு இன்றைய இளைஞர்கள் யாரும் இந்த கூட்டணிய எதிர்பார்க்கவில்லை இந்த கூட்டணி வர வாய்ப்பில்லை என தடாலடி பதிலை கூறினார்.