இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கி வடிவேல் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்த படம் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’. 2006-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 11 வருடங்கள் கழித்து உருவாகி வருகிறது. முந்தைய பாகத்தில் கதாநாயகனாக நடித்த வடிவேலுவே இப்படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். சிம்புதேவன் இயக்குகிறார்.

கடந்த பாகத்தில் 2 வேடங்களில் நடித்த வடிவேலு இப்படத்தில் 3 வேடங்களில் நடிக்கிறார். படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சியையும் படம்பிடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்த பாடல் காடசியில் 100 வெளிநாட்டு நடன அழகிகளுடன் வடிவேலு ஆடிப்பாடும் காட்சியை படமாக்க உள்ளார்களாம். இந்த பாடல் ரசிகர்களுக்கு கண்டிப்பான விருந்தளிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். இப்படத்தை ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.