பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ஓவியாவுக்கு ரசிகர்களின் பேராதரவு இருந்தாலும் அந்த வீட்டிற்குள் ஓவியா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். பிந்துமாதவி வந்தவுடன் தான் ஓரளவு ஓவியாவுக்கு ஆறுதலாக உள்ளது

இந்த நிலையில் நேற்று முழுவதும் ஓவியா பைத்தியம் பிடித்ததுபோல் ஆரவ்விடம் தனது காதலை சொல்லிக்கொண்டே இருக்க, ஆரவ், ஓவியாவை தவிர்த்து கொண்டே இருந்தார்.

இந்த நிலையில் இன்று ஓவியா கறாராக என் மேல் உனக்கு காதல் இருக்கா? இல்லையா? அதை நீ தெளிவாக கூறிவிடு என்று கூற, அதற்கு ஆரவ், ‘எதுவுமே இல்லை’ என்று ஓங்கி அடித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓவியா, இனிமேல் என்னுடைய வாழ்க்கையில் நீ இல்லை’ என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.

அப்போது ஓவியாவிடம் வையாபுரி, ‘நீ எதுக்கும் கவலைப்படாதே, உன்கிட்டே நியாயக் இருக்கும், நான் உனக்காக யாரிடம் வேண்டுமானாலும் பேசுகிறேன்’ என்று ஆறுதல் கூறுகிறார்.