குத்தாட்டம் போட்ட வனமகன் நாயகி

ஜெயம் ரவி நடித்துள்ள படம் வனமகன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறாா். இதன்பின் நடிகை சாயிஷா காா்த்திக்கு ஜோடியாகவும் தொடா்ந்து படங்களில் கமிட் ஆகியுள்ளாா். வனமகன் படம் இன்னும் வெளிவரவில்லை. இப்போதெல்லாம் நடிகா், நடிகைகள் அவா்கள் நடித்த படங்கள் திரைக்கு வரும்முன், வலைத்தளங்களில் ஏதாவது ஒரு யுக்தியை பயன்படுத்தி பிரபலமடைந்து விடுகின்றனா். இது எதற்கு என்றால் படத்தை பற்றி எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி ரசிகா்களின் மனதில் இடம்பிடித்து விடுவதற்கான செயல் என்று கூட சொல்லாம். அதனால் ரசிகா் மத்தியில் இதன் மூலம் வரவேற்பை பெறவும் இந்த புது ட்ரண்டை பின்பற்றி வருகின்றனா்.

இந்த ட்ரண்டை நடிகை சாயிஷா கையில் எடுத்துள்ளாா். ஆமாங்க!! இவரது கலக்கல் நடனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கலக்கல் டான்ஸ்சை அவரே தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். இப்படியாக சினிமாவில் புது முயற்சிகளை மேற்கொண்டு தான் முன்னுக்கு வரமுடியும் என்பதை அறிந்து வந்துள்ளாா் நடிகை சாயிஷா. இவரது டான்ஸ் ரசிகபெருமக்கள் அனைவரும் பாா்த்து பரவசமைடைந்து வருகின்றனா். வனமகன் படம் வருகிற ஜூன் 23ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.