பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் ரேடான் நிறுவனம் தற்போது ‘வாணி ராணி’ என்ற மெகா சீரியலை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மேனேஜராக சுகுமாறன் என்பவர் உள்ளார். இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் கோடை விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த நிலையில் ‘வாணி ராணி’ சீரியலில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வரும் நடிகை சபீதா ராயை வீட்டுக்கு வரவழைத்து குடும்பம் நடத்தியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபீதா ராயை வீட்டை வெளியேற்றினார் சுகுமாறன். இதனால் ஆத்திரம் அடைந்த சபீதா, சுகுமாறனின் சட்டையை பிடித்து கிழிக்க, பதிலுக்கு சுகுமாறன், சபீதாவின் முடியை பிடித்து இழுக்க அந்த இடமே பெரும் பரபரப்பானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். ‘வாணி ராணி’ சீரியலில் அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கும் வில்லி வேடத்தில் நடித்து வரும் சபீதா, சுகுமாறன் குடும்பத்திற்கும் வில்லியாக மாறியுள்ளதாகவே அக்கம் பக்கத்தினர் பேசி வருகின்றனர்.