நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். சில வருடங்களுக்கு முன்பிருந்தே தனது தந்தை விஜயகுமாருடன் பிரச்சினை செய்வது வீட்டின் முன் தர்ணா செய்வது என ரகளையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் சில வருடங்களாக அமைதியாக இருந்த வனிதா நேற்று பத்திரிக்கையாளர்களிடம் கூட தகராறில் ஈடுபட்டார். விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா சூட்டிங்குக்காக வாடகைக்கு விடப்படுகிறது. இதை வாடகைக்கு எடுத்த வனிதா அந்த பங்களாவை காலி செய்ய மறுக்கிறார் .எனது சொத்து என்று சொல்கிறார் என்பது நடிகர் விஜயகுமாரின் குற்றச்சாட்டு. இது குறித்து போலீசிலும் வனிதா மீது புகார் அளித்திருக்கிறார். இது சம்பந்தமான செய்திகளை சேகரிக்க சென்றபோதுதான் பத்திரிக்கையாளர்களிடம் தகராறு செய்தார்.

இதையும் படிங்க பாஸ்-  க்ரைம் த்ரில்லர் படமான ‘தடம்’ ரிலீஸ் ஒத்தி வைப்பு!

இந்நிலையில் விஜயகுமாரின் புகாரை ஏற்று போலீசார்  அவரது வாடகை வீட்டில் தங்கியிருந்த வனிதா நண்பர்கள் 8 பேரை கைது செய்தனர். வனிதா மீது வழக்கு பதிவு மட்டும் செய்யப்பட்டுள்ளது.