நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதாவிற்கும் ஏற்பட்டிருக்கும் குடும்ப சண்டை இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே நடந்து வருகிறது.

இரண்டு மூன்று நாட்களாக மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த குடும்ப சண்டையில் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில்,  விஜயகுமாரின் வீட்டை காலி செய்ய மாட்டேன் என போராட்டம் செய்த வனிதாவை மதுரவாயல் போலீசார்  அந்த வீட்டிலிருந்து வெளியேற்றினர்.

இதையும் படிங்க பாஸ்-  அருண் விஜய் மணிரத்னம் டீமில் சேர்ந்து எப்படி?

இந்நிலையில் ஒரு டிவிக்கு பேட்டியளித்த வனிதா

விஜயகுமார், தனது மகன் அருண் விஜய், மருமகன் ஹரி பேச்சை கேட்டு ஆடுவதாக தெரிவித்துள்ளார்.

நான் 2 திருமணம் செய்துகொண்டதை பெரிது படுத்தி பேசுகிறார்கள். ஒரு புருஷனோடு  வாழ்பவர்கள் எல்லாம் நல்லவர்களா? என கேட்டுள்ளார். இவரது இந்த பேச்சு பல பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என பல பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் வீட்டு குடும்ப சண்டையில் ஊரார் வீட்டு பெண்களை இழுப்பது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார்கள்.