Vanitha Vijayakumar – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியா குறித்து அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ள கருத்து லாஸ்லியா ஆர்மிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள லாஸ்லியாவிற்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர். ஓவியாவை போல் இவருக்கும் ஆர்மி உருவாகியுள்ளது. இந்நிலையில், அவரை பற்றி வனிதா விஜயகுமார் சில கருத்துகளை கூறியுள்ளார்.

சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார் கொடுத்த பேட்டியில் ‘ ‘ யா’ என முடியும் பெயர்கள் மீது ரசிகர்களுக்கு அப்படி என்ன ஈடுபாடோ தெரியவில்லை. லாஸ்லியா சின்ன பெண். அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஜாலியாக பாட்டு பாடிக்கொண்டு இருப்பார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் அவர் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், போட்டியில் வெல்லும் அளவுக்கு அவருக்கு தகுதி இருப்பதாக நான் கருதவில்லை’ என அவர் தெரிவித்தார்.

வனிதாவின் பேட்டி லாஸ்லியா ஆர்மியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.