நடிகை வனிதா விஜயகுமார் இவர் விஜயுடன் சந்திரலேகா படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மாணிக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர். ஒரு கட்டத்தில் திருமணமாகி செட்டிலானார் திருமணத்திலும் பல பிரச்சினைகள். இந்நிலையில் விஜயக்குமாருடனும் அருண் விஜயுடனும் சில வருடங்களுக்கு முன் மிகப்பெரும் பிரச்சினைகள் வெடித்தது. அருண் விஜய் தாக்குதலில் ஈடுபட்டார் என விஜயகுமார் வீட்டு முன் உட்கார்ந்து தர்ணாவில் எல்லாம் வனிதா ஈடுபட்டது தனிக்கதை.

இதையும் படிங்க பாஸ்-  மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் செப்டம்பர் 28ல் வருகிறது

அருண் விஜய் இந்த பிரச்சினையில் போலீஸ் கேஸ் ஆனதால் தலைமறைவாக எல்லாம் இருந்தார். இந்நிலையில் சென்னை ஆலப்பாக்கத்தில் அஷ்டலட்சுமி நகரில் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இது திரைப்படங்கள் எடுப்பதற்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதா சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்காக இதை வாடகைக்கு எடுத்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  அருண்விஜய் நடிக்கும் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு

சமீபத்தில் அதற்கான படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இதனால் வீட்டை காலி செய்யுமாறு நடிகர் விஜயகுமார் கூறியுள்ளார். ஆனால் வனிதா வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. காலி செய்தே ஆக வேண்டும் என்று நடிகர் விஜயகுமார் வனிதாவிடம் கண்டிப்புடன் கூறியுள்ளார். ஆனால் வனிதாவோ, “இது என்னுடைய சொத்து… காலி செய்ய முடியாது” என அடாவடியாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  சுமாரா போனாலே விடமாட்டாங்க..சூப்பரா போற தடம் படத்தை சும்மா விடுமா டோலிவுட்!

இது விசயமாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களையும் மோசமாக திட்டி இருக்கிறார் வனிதா நடுரோட்டில் நின்று கொண்டு பத்திரிக்கையாளர்களை காட்டமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வனிதா வீட்டை காலி செய்ய மறுக்கிறார் என மதுரவாயல் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.