நடன இயக்குனர் ராபர்ட்டும் அவரும் காதலித்ததாத நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, தொலைக்காட்சி சீரியல் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் வனிதாவுக்கு ஒரு மகன் இருக்கிறார். அதன்பின் அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற வனிதா ஆனந்தராஜ் என்பவரை 2வது திருமணம் செய்தார். அந்த வகையில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

இந்த மகள் தொடர்பாகத்தான் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு களோபரமாகியது. அதன்பின் அவரின் மகள் தன் தாயிடமே வசிப்பதாக கூறிவிட பஞ்சாயத்து முடிவிற்கு வந்தது.

தனது இரு கணவர்களையும் விவாகரத்து செய்த வனிதா, சில வருடங்களுக்கு முன் நடன இயக்குனர் ராபர்ட்டை அவர் திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் வெளியானது. சிலர், அவர்கள் திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழ்வதாகவும் கூறினர். ஆனால், இதை ராபர்ட் மறுத்தார்.

இதுபற்றி பேட்டியளித்துள்ள ராபர்ட் ‘நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் கணவன் மனைவியும் அல்ல. எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தை நான் இயக்கினேன். அவர் தயாரிப்பாளர். அவ்வளவுதான் எங்களுக்கு இடையேயான உறவு. ஆனால், செய்தி இப்படி வெளியே பரவியது. படத்தின் விளம்பரத்திற்காக வனிதா அதை பயன்படுத்திக் கொண்டார்” என ராபர்ட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளித்துள்ள வனிதா ராபர்ட் கூறுவது பொய். இருவரும் நல்ல உறவில் இருந்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து அவரவரின் பாதையில் சென்றுவிட்டோம். என்னுடைய பெயரை அவரது கையில் பெரிய எழுத்தில் பச்சை குத்தி வைத்துள்ளார். பட விளம்பரத்திற்காக யாரும் இதை செய்ய மாட்டார்கள்’ என கூறியுள்ளார்.