பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் மிரட்டும் வகையில் பேசி டெரர் காட்டியர் வந்த வனிதா விஜயகுமார். இதனால் ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்த அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதேநேரம், அவர் வெளியேறிய பின் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவே இல்லை. டல் அடிக்கிறது எனவும் சிலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல தொலைக்காட்சியில்தான் காட்டுவார்கள். ஆனால், சில நிமிடங்களிலேயே மீண்டும் லைட்டை ஆன் செய்து விடுவார்கள். அந்த வெளிச்சத்தில்தான் தூங்க வேண்டும். இதனால், பலரும் சரியான உறக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தொடக்கத்தில் எனக்கும் இது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், செல்ல செல்ல அது பழகிவிட்டது’ என தெரிவித்துள்ளார்.